நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது

by Staff / 25-05-2024 03:52:24pm
நண்பனின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் கைது

கோவை வடமதுரை, பி.ஜி.புதூரில் காதல் திருமணம் செய்த தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து ஈரோட்டை சேர்ந்த கணவரின் நண்பரான தரண் (19) என்பவரிடம் வேலை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளனர். பின்னர் இருவரையும் கோபி வரச்சொல்லி தரேன் கூறியுள்ளார். அப்போது நிதி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி நண்பனின் மனைவியை மட்டும் பைக்கில் கூட்டி சென்றுள்ளார் தரண். அப்போது யாரும் இல்லாத பகுதியை பார்த்து வண்டியை நிறுத்தி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என கூறி மிரட்டியுள்ளார். பின்னர் போலீசில் அளித்த புகாரின் பேரில் தரேன் கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via