அண்ணாமலைக்கு ஜெயலலிதா தோழி சசிகலா பதிலடி

by Staff / 25-05-2024 03:50:42pm
அண்ணாமலைக்கு ஜெயலலிதா தோழி சசிகலா பதிலடி

ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி ஜெயலலிதா தான் என்பது நாடறிந்த உண்மை. அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் இருந்தவர். தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்திருந்த பெருமை ஜெயலலிதாவையே சேரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்து விட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories