அசுத்தமான நீரை குடித்து 535 பேருக்கு உடல்நலக்குறைவு

இமாச்சல பிரதேசத்தின் ஹவிபூர் மாவட்டத்தில் குடிநீர் மாசுபட்டுள்ளது. இந்த தண்ணீரை குடித்த 535 பேர் நோய்வாய்ப்பட்டனர். நீர்ப்பாசனத்துறையால் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படும் நீரில் அதிகளவு பாக்டீரியாக்கள் காணப்பட்டது. கட்டப்பட்டு வரும் தொட்டியில் தேங்கியுள்ள தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், தண்ணீர் மாசுபட்டது. இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முதல்வர் சுக்விந்தர் சிங்கின் சொந்த தொகுதியான நௌடானை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :