மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.50 லட்சம் பறிப்பு

இரணியல் அருகே நெய்யூரைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை நாகலட்சுமி (40), நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ. 2.50 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். மலேசியாவிற்கு அழைத்து சென்ற பின்னரும் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இரணியல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு வரும் 1ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
Tags :