கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்

தமிழகம் உள்ளிட்ட நாடு முழுதும் 1,256 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சில பள்ளிகளில் மட்டுமே 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை 'பால்வாடிகா' என்ற கே.ஜி., முதல்நிலை வகுப்பில் சேர்க்கும் வசதி உள்ளது.
மற்ற பள்ளிகளில், 6 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை, முதல் வகுப்பில் சேர்க்கலாம்.இந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு துவங்கிய நிலையில் . வரும் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கு https://balvatika.kvs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து குழந்தையின் விபரங்கள், சான்றிதழ்களை பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வான மாணவர்களின் முதல் பட்டியல் 25, 26ம் தேதிகளிலும் இரண்டாம் பட்டியல் அடுத்த மாதம் 2ம் தேதியும் மூன்றாம் பட்டியல் 7ம் தேதியும் வெளியாக உள்ளது.
Tags : கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்