தஞ்சையிலிருந்து டில்லிக்கு புறப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர்

by Editor / 04-08-2021 10:21:03am
தஞ்சையிலிருந்து டில்லிக்கு புறப்பட்ட  விவசாயிகள் சங்கத்தினர்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

எட்டு மாதங்களை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி நோக்கி சோழன் விரைவு இரயிலில் புறப்பட்டனர்.

அதற்கு முன்னதாக தஞ்சை ரயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே உடனடியாக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories