தீ விபத்து ஏராளமான மருத்துவ பொருட்கள் எரிந்து நாசம்

by Admin / 25-02-2022 12:28:38pm
 தீ விபத்து ஏராளமான மருத்துவ பொருட்கள் எரிந்து நாசம்

 
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இங்கு சாத்தூர், கேத்தி பாலாட, எல்லநள்ளி போன்ற பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

கடந்த கொரோனா நோய் தொற்று பாதிப்பின் போது சுகாதார நிலையத்தில் இருந்து குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தடுப்பு மருந்துகள் இங்கிருந்து அனுப்பி வைக்கப் பட்டது. மேலும் கொரோனா தடுப்பு மருந்து  உள்ளிட்ட உபகரணப் பொருட்களும் முகக் கவசங்கள், பி பி கிட்டுகள், சானிட்டரி பாட்டில்கள் இங்கு சேமித்து  வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு திடீரென இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் தீப்பற்றி மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
 
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிந்துகொண்டிருந்த  தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். மேலும் இதுகுறித்து கேத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo