தீவிரவாதிகளின் தாக்குதல்.. 64 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தீவிரவாதிகள் சமீபத்தில் பயங்கர தாக்குதல் நடத்தினர். வடக்கு மாலியில் நடந்த இருவேறு தாக்குதல்களில் 64 பேர் உயிரிழந்தனர். நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மீது மற்றும் ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 49 பேர் மற்றும் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதல் அல்-கொய்தா அமைப்பின் செயல்பாடாக இருக்கலாம் என அங்குள்ள போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Tags :



















