கழிவு பொருட்களை ஏற்றி வந்த லாரியை விரட்டி பிடித்த பொதுமக்கள்.

by Staff / 09-09-2023 01:38:25pm
கழிவு பொருட்களை ஏற்றி வந்த லாரியை விரட்டி பிடித்த பொதுமக்கள்.

கேரளாவிலிருந்து கழிவு பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் களியல் வழியாக படப்பச்சை பகுதிக்கு பல்வேறு கழிவுகளை ஏற்றி கொண்டுவரப்பட்ட லாரியை பொதுமக்கள் விரட்டி குஞ்சாலுவிளை பகுதியில் வைத்து பிடித்துள்ளனர். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து போலீசாருக்கும், அருமனை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியை பறிமுதல் செய்தனர். போலீசார் லாரியில் சோதனையிட்ட போது அதில் இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் கூறும்போது, கேரளாவில் இருந்து கழிவுகள் அடிக்கடி கொண்டு வருகின்றனர். இதனை சாலையின் ஓரத்தில் கொட்டி விட்டு வாகனங்கள் செல்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

 

Tags :

Share via

More stories