தேவர் ஜெயந்தி விழா முதல்முறையாக முப்பெரு விழாவாக துவங்கியது.

by Editor / 28-10-2022 07:09:19am
தேவர் ஜெயந்தி விழா முதல்முறையாக முப்பெரு விழாவாக துவங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இந்த ஆண்டு கும்பாபிஷேக விழா,தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா, ஆன்மீக விழாவுடன் கோலாகலமாக துவங்கியது. 

முத்துராமலிங்கத்தேவர் 115வது ஜெயந்தி விழா 60வது குருபுஜை விழா கும்ப அலங்காரத்துடன் இன்று காலை மஹாகணபதி கோமம்  இரண்டு கால யாகசாலை பூஜை பூரணாகுதி கோ பூஜையுடன் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையிலா சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு சென்று முத்துராமலிங்கத்தேவர் ஆலய விமான கோபுரம் விநாயகர் முருகன் ஆலய விமான கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிசேக விழாவுடன் தேவர் ஜெயந்தி முதல் நாள் ஆன்மீக விழா கோலாகலமாக நடைபெற்றது.

இன்று 28ம் தேதி ஆன்மீக விழா நாளை 29ம் தேதி அரசியல் விழா 30ம் தேதி குருபூஜை  விழா 30ம் தேதி மாலையில் அரசு விழா நடைபெறுகிறது.இவ்விழாவில்  அமைச்சர்கள் பங்கேற்று அரசின் நல திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளனர். 

 

Tags :

Share via