அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக சோதனை

by Staff / 06-11-2023 11:59:57am
அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக சோதனை

சென்னை, திருவண்ணாமலை உள்பட எ. வ. வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி. ஆர். பி. எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருவண்ணாமலையில் எ. வ. வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், அமைச்சர் எ. வ. வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ. வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo