கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 22 ஆவது மாவட்ட மாநாடு

by Admin / 13-10-2023 10:48:44am
 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 22 ஆவது மாவட்ட மாநாடு

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 22 ஆவது மாவட்ட மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல்  தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

 தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கண்ணன் வரவேற்புரையாற்றினார்.  இதில், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் நிறுவனத் தலைவர்.சகிலன் கலந்து கொண்டு கேபிள் டிவி தொழிலில் நவீன தொழில்நுட்பம் பற்றியும், அதனை எப்படி அணுகுவது, அடுத்த கட்ட வளர்ச்சி பற்றிய எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து சமீபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி தொகையும் வழங்கினார்.

இதில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநிலம், மாவட்டம், ஒன்றிய, நகர நிர்வாகிகள்,, TCCL நிர்வாக பொறுப்பாளர்கள், TIC தொழில்நுட்ப குழுவினர்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் 22 ஆவது மாவட்ட மாநாடு
 

Tags :

Share via

More stories

Logo