பிரபல துணை நடிகை சிந்து மார்பகப் புற்றுநோயால் காலமானார்.

by Admin / 07-08-2023 11:31:03am
பிரபல துணை நடிகை சிந்து மார்பகப் புற்றுநோயால் காலமானார்.

பிரபல துணை நடிகை சிந்து மார்பகப் புற்றுநோயால் காலமானார் .தமிழ் திரை உலகில் இணைந்த கைகள் மூலம் 1990இல் தமிழ் திரை படத்தில் நடிக்க தொடங்கிய துணை நடிகை சிந்து தொடர்ச்சியாக பாட்டாளி மகன் ,பொண்டாட்டி தேவை, புரியாத புதிர், சாமி போட்ட முடிச்சு, ஒன்னும் தெரியாத பாப்பா, ஊர் மரியாதை, கோகுலம், சுரங்கார காவிய ,சீமான்,, நவீன நதியிலே ,துங்கபத்ரா, சந்திரலேகா, பரம்பரை, நம்ம ஊரு ராசா, பிஸ்தா, சூரிய வம்சம், ஆகா என்ன பொருத்தம், பூவேலி, சூரிய பார்வை ,பொண்ணு வீட்டுக்காரன், புன்னகையை நான் இருந்தால், என்றென்றும் காதல், நெஞ்சினிலே ,குபேரன், கிருஷ்ணா கிருஷ்ணா, குங்குமப்பொட்டு கவுண்டர், லவ்லி, நம்ம வீட்டு கல்யாணம், எங்கே எனது கவிதை, அன்பே அன்பே, ஆளுக்கு ஒரு ஆசை ,சொக்கத்தங்கம், கிரி, ஜனா, ஐயா என 1990 இல் தொடங்கிய 2005 வரைதமிழ்,கன்னடம் உள்ளிட்ட கிட்டத்தட்ட 35 திரைப்படங்களுக்கு மேலாக நடித்தவர், சிந்து, 1999இல் மைக்ரோ ,பஞ்சவர்ணகிளி,,பெண்,,அண்ணாமலை,,மெட்டிஒலி தொலைக்காட்சி தொடரிலும் நடித்தவர், 1971இல் பிறந்த அவர் மார்பக புற்றுநோயின் காரணமாக ஒரு மார்பு அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புற்றுநோய் பரவியதையின் காரணமாக இரண்டாவது மார்பையும் அகற்றக் கூடிய சூழ்நிலையில் பல்வேறு திரைப்பட நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .இவருக்கு ஸ்ரேயா என்ற  மகள் உள்ளார். இவரது கணவர் ராகுவீர் 1995லே இறந்துவிட்டார்.

பிரபல துணை நடிகை சிந்து மார்பகப் புற்றுநோயால் காலமானார்.
 

Tags :

Share via