வட இந்தியர்கள் வருகையால் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது: சீமான்

by Staff / 15-03-2023 05:10:28pm
வட இந்தியர்கள் வருகையால் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது: சீமான்

வட இந்தியர்கள் வருகையால் போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது: சீமான்
வட இந்தியர்களின் வருகையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை என சீமான் தெரிவித்துள்ளார்.ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்த பின் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வட இந்தியர்கள் வருகைக்கு பிறகே கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பழக்கம் அதிகரித்துள்ளது என்றார்.  
பல்வேறு இடங்களில் வட இந்தியர்கள்தான் தமிழர்களை தாக்குவதாக சீமான் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். பிரசாந்த் கிஷோர் அவரது மாநிலத்தில் கட்சி தொடங்கப் போகிறார். அதனால் பீகார் மாநில மக்களுக்கு ஆதரவாக பேசுகிறார்.பிரசாந்த் கிஷோருக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பிய சீமான், வட இந்தியர்கள் வந்தால் மாநில நுழைவுச் சீட்டு வழங்குவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்க வேண்டும் என தெரிவித்தார். ரயில்வே, என்எல்சி என ஒன்றிய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.வட மாநிலத் தொழிலாளர்கள் வருகைக்கு பின் தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என்பதே உண்மை என பேசினார்.   தமிழ்நாடு வரும் வட மாநிலத்தவர்கள் தொடர்பான முழு தரவு இல்லை எனவும் சீமான் தெரிவித்தார்.

 

Tags :

Share via