42 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதான சாலையில் செயல்பட்டு வரும் மீன் கடையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் இருந்த மீன்களில் பல காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த மீன்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். மொத்தம் 42 கிலோ கெட்டுப்போன மீன்கள் கைப்பற்றப்பட்டது.
Tags :