நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்-பட்டியல் தயார்.
இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், சென்னையில் வழக்கம்போல பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன.
நீண்டகாலம் போராடிப்பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். முறைசார தொழிலாளர்களுக்கான வாரியம் அமைக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்ககூடாது. வேலைவாய்ப்புகளை அதிகரித்து, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போராட்டத்தி4ற்கு தமிழகத்தில் தொமுச , சிஐடியு , ஏஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளபோதும் சென்னையில் இன்று பேருந்து சேவையில் பாதிப்பு இல்லை. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவை போராட்டத்தில் பங்கேற்காத நிலையில் பேருந்துகள் வழக்கம்போலவே இயங்கி வருகின்றன.
போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ள தலைமைச் செயலகம், பணிக்கு வராதவர்களின் பட்டியலை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
Tags : Nationwide strike - list ready.



















