கள்ளச்சாராயம் தடுப்பு குறித்த அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை
ராமநாதபுரம் ஆட்சியர கூட்டரங்கில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் தடுப்பது மட்டுமின்றி முற்றிலும் தடை செய்யப்பட்டதை என்பதை கண்காணிக்க வேண்டும். காவல், வருவாய் துறையினர் இணைந்து கிராமப் பகுதிகளில் தின்ம் கண்காணிக்க வேண்டும் கள்ளச்சாராயம் குறித்த தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்க வலியுறுத்த வேண்டும்.பொதுமக்களும்மேலும் அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் அரசு அனுமதித்த நேரங்களில் மட்டும் செயல்பட வேண்டும். அது மட்டுமின்றி அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்ய வேண்டும். இதை காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், வட்டாட்சியர்கள் செண்பகலதா, ராஜகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags :