மாரிமுத்து மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

by Staff / 08-09-2023 01:05:15pm
மாரிமுத்து மறைவு - ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இரங்கல் குறிப்பு பதிவிட்டுள்ள அவர், இயக்குநரும், நடிகரும், வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவரும், எதிர்நீச்சல் தொடர்மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தவருமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து அவர்கள் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். மாரிமுத்து அவர்களின் இழப்பு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்திற்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via