மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதற்கு தடுப்பூசி அதிகப்படியாக செலுத்துவது தான் காரணம். ஞாயிறு தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் மட்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 70% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பொதுமக்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்துவது அதிகப்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ராணிப்பேட்டை, தூத்துக்குடி, திருப்பத்தூர், மாவட்டங்களில் 35% விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மாவட்டங்களில் 35% நெல்லை மாவட்டத்தில் 37% தென்காசி, தஞ்சை, புதுக்கோட்டை 38% வேலூர், தர்மபுரி, 38% நாகை, திருவாரூர், மாவட்டங்களில் 39% சேலம் ,கடலூரில் 40% சிவகங்கை மாவட்டத்தில் 40% அரியலூர், திருச்சி, கிருஷ்ணகிரி 45% சென்னை 60% கோவையில் 60% நீலகிரி மாவட்டத்தில் 61% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
Tags :