மு.க.அழகிரி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 16-10-2021 09:28:37am
மு.க.அழகிரி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் புகழ்பெற்ற லயோலா கல்லூரி நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, இந்த லயோலா கல்லூரியில் என் அண்ணன் அழகிரி படித்தார். பின்னர் தற்போதைய எம்பி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படித்தனர். இங்கு படித்தவர்கள் உலகளவில் சிறப்புடன் விளங்குகின்றன.

இந்த கல்லூரியில் நான் படிக்க வில்லை. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக என்ற நிலைமைக்கு மாற வேண்டும். காமராஜரின் காலத்தில் பள்ளிகள் உருவாகின. திமுக என்ற இயக்கம் உருவானதே கல்லூரிகளில் தான் என மு.க. ஸ்டாலின் கூறினார்.

 

Tags :

Share via

More stories