கூட்டுறவு வார விழா- மேடையில் காசோலையை பெற்ற பெண் கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

by Editor / 15-11-2024 04:21:46pm
 கூட்டுறவு வார விழா- மேடையில் காசோலையை பெற்ற பெண் கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் 71 வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும்  3000 மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 31 கோடி மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், சுய உதவி குழு கடன், பெண்கள் தொழில் முனைவோர் கடன் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கியதோடு, மகளிர் சுய உதவிகளுக்கான புதிய கூட்டுறவு சங்கத்தினை தொடங்கி வைத்தார்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி பேசும்போது கடன்வழங்குவதில் கூட்டுறவு சங்கங்கள் தாமதம் கட்டிவருவதாக தெரிவித்துவிட்டு பேச்சை நிறைவு செய்து இருக்கைக்கு வந்தவரை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அழைத்து எதோ சொல்லவே பின்னர் இருக்கைக்கு சென்றநிலையில் மீண்டும் அழைத்து எதோ கூறவே சட்டமன்ற உறுப்பினர் பின்னர் மாற்று பகுதிக்கு சென்று அமர்ந்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் பெயரில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களும் மண்டபத்தில் அமர வைக்கப்பாட்டிருந்தனர்.தேன் பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் பணியாற்றிய ஐயப்பன் என்பவர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது மனைவி வேலு மயில் என்பவருக்கு ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார். இந்த காசோலையை வாங்கிய நிலையில் பெண் கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்
 

 

Tags :  கூட்டுறவு வார விழா- மேடையில் காசோலையை பெற்ற பெண் கண்ணீர் சிந்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Share via