வேறு பெண்ணுடன் திருமணம் செய்த ராணுவ வீரர்.. காதலி தற்கொலை

by Staff / 27-02-2025 03:02:59pm
வேறு பெண்ணுடன் திருமணம் செய்த ராணுவ வீரர்.. காதலி தற்கொலை

வேலூர் அடுத்த நஞ்சு கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன். இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்பரசி என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அன்பரசியை திருமணம் செய்து கொள்ள மறுத்த ராணுவ வீரர், தனது உறவினர் பெண்ணை கடந்த 15 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதனால், மனவுளைச்சலில் இருந்த அன்பரசி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via