ரேஷன் கடைகளில் அரிசி அளவு விவரங்கள்

by Editor / 06-07-2021 08:30:25pm
ரேஷன் கடைகளில் அரிசி அளவு விவரங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள 76 ரேஷன் கடைகளில் இந்த மாதம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடைகளில் அட்டவணை பட்டியல் ஒட்டப்பட்டு உள்ளதால் தங்களுக்கு எவ்வளவு அரிசி வழங்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது குடும்ப அட்டைகளை பொறுத்தவரைமிகவும் வறுமை கோட்டுக்கு உள்ளவர்கள் ரேஷன் கார்டு முன்னுரிமை உள்ளவர்கள் குடும்ப கார்டு முன்னுரிமை இல்லாதவர்கள் என குடும்ப அட்டைகள் பல உள்ளன . இதில்

குடும்ப அட்டை தாரர்களின் வீட்டிலுள்ள நபர்களைப் பொறுத்து அரசு வழங்கும் இலவச அரிசி வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் தங்களுடைய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடை முகப்பு பகுதியில் அட்டவணை இடப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட வழங்கல் துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ளது

 

Tags :

Share via