கோவிலின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக யூடியூபர் கோபிநாத் கைது

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் பெயரை பயன்படுத்தி இளைய பாரதம் யூடியூபர் சேனல் நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் முப்பத்தி ஆறு லட்ச ரூபாய் வரை பணம் வசூலித்ததாக மோசடி செய்ததாக கோயில் செயலாளர் அரவிந்தன் புகார் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காரத்திற்கு ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடி யூ பார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.
Tags :