சபரிமலையில் சினிமா நடிகர் தரிசனம் காவல்துறை அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு.

சபரிமலையில் சினிமா நடிகர் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு அளித்ததாக தேவஸ்ம் போர்டு மற்றும் காவல்துறைக்கு கேரள உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று சபரிமலைக்குச் சென்ற நடிகர் திலீப் சுவாமி தரிசனம் செய்ய ‘விஐபி’ அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவர் தரிசனம் செய்து முடிக்கும் வரை ஏராளமான பக்தர்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று
இது குறித்த தகவல் அறிந்த கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை நடத்தியது அப்போது சினிமா நடிகருக்கு விஐபி அந்தஸ்து
அளித்ததற்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) மற்றும் காவல்துறையை கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கடுமையாக சாடியது.
குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பக்தர்கள் கூட சரியான சாமி தரிசனம் இல்லாமல் திரும்ப வேண்டியிருந்தது.
முறையான தரிசனத்திற்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை காலங்களில் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்
திலீப் மற்றும் பலர் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்திற்குள் நுழைந்ததாக தெரிய வருகிறது. அப்படிப்பட்ட நபர்கள் எப்படி போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்ய முடியும்? என நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் நீதிபதி முரளி கிருஷ்ணா எஸ். ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
திலீப்புக்கு எப்படி முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பதை விளக்கி காவல்துறை அறிக்கை சமர்ப்பிக்க டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.உயர்நீதிமன்றத்தின் இந்த சவுக்கடி கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது
Tags : சபரிமலையில் சினிமா நடிகர் தரிசனம் காவல்துறை அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு.