இளைஞரை குதறிக்கொன்ற புலிகள்

by Staff / 06-12-2022 02:16:37pm
இளைஞரை குதறிக்கொன்ற புலிகள்

மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவரை மூன்று புலிகள் தாக்கின. சந்திராபூர் மாவட்டத்தின் ராஜுரா ரேஞ்சில் உள்ள லக்காட் கோட் வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் குர்ஷாகி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த புலிகள் தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 4 புலிகள் சூழ்ந்துகொண்டு இளைஞரை தாக்கியபோது, வனத்துறையினர் துப்பாக்கி மூலம் சுட்டு விரட்ட முயன்றபோது, 2 புலிகள் ஓடின. எதற்கும் அஞ்சாமல், சீறிப்பாய்ந்த மற்றொரு புலி, இளைஞரின் தலையை கவ்வி கொடூரமாக கொன்றது.

 

Tags :

Share via
Logo