ஆர்பரித்து கொட்டத்தொடங்கிய குற்றால அருவிகள்
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மழைக்கான மேகங்கள் திரண்டு அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலம் மலைப்பகுதி முதல் கடையநல்லூர் வரை உள்ள மலைப்பகுதிகளில் பலத்தமழை பெய்தது.
இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிகாலை முதல் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வறண்டு கிடந்த குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து பாதுகாப்பு வளையத்தை தொட்டுக் கொட்டுவதன் காரணமாக கோடை காலம் என்பதாழும், பள்ளி விடுமுறை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குற்றாலம் நோக்கி படை எடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயினருவியில் கட்டுக்கடங்காத கூட்டம் காலை முதலில் அதிகரித்துள்ளது குற்றால அருவியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags : Courtallam waterfalls that began to overflow