பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி: ஜன. 29-ம் தேதி தொடங்குகிறது

by Staff / 24-01-2024 01:23:52pm
பெற்றோரை கொண்டாடுவோம்’ நிகழ்ச்சி: ஜன. 29-ம் தேதி தொடங்குகிறது

தமிழக பள்ளிக்கல்வித் துறை, மாணவர்கள், ஆசிரியர்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன் ஒருபகுதியாக ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்ச்சியை நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந் நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் மொத்தம் 7 மண்டலங்களாக பிரித்து நடத்தப்பட உள்ளது.

மதுரையில் வரும் ஜனவரி 29-ம் தேதி முதல்கட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிபள்ளிக் கல்வித்துறைச், செயலர். குமர குருபரன் உட்பட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா்.

 மதுரை மண்டலத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் இருந்து ஒரு பள்ளிக்கு தலா 4 பெற்றோர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் என சுமார் 30, 000 பேர் கலந்துகொள்ள உள்ளனர்., நிகழ்வில் பள்ளி மேம்பாடு தொடர்பாக பெற்றோருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்துரையாடுவார் என்று கல்வி துறை அதிகாரிகள் தகவல்

 

Tags :

Share via

More stories

Logo