நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் - அன்புமணி

by Staff / 13-04-2023 11:37:26am
நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் - அன்புமணி

நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் கத்தாழை பகுதியில் நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நில உரிமையாளர்களின் வீடுகளில் அறிவிக்கை ஒட்டச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர். அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் தரக்கூடியவை. அவை கையகப்படுத்தப்பட்டால், மக்கள் உள்நாட்டு அகதிகளாக அவதிப்பட வேண்டியிருக்கும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories