கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. நேற்று மாலை பணிமுடிந்து ஊழியர்கள் வீட்டுக்கு சென்ற நிலையில் உற்பத்திப் பொருட்களை சேமித்து வைக்கும்குடோனில் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது. இரண்டு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்து மின்கசிவு காரணமாக நேரிட்டதால் அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில்ஒரகடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :