பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான டிபிஐயில் இடைநிலை ஆசிரியர்கள்போராட்டம்-கைது .

by Admin / 26-12-2025 06:00:57pm
பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான டிபிஐயில் இடைநிலை ஆசிரியர்கள்போராட்டம்-கைது .

இன்று காலை பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான டிபிஐயில் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு -சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2009 ஜூன் 1க்கு பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும் அதற்கு முன்னர் பணியில் இணைந்த ஆசிரியர்களுக்கும் இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று முற்றுகையிட முயன்றனர். போராட்டத்தில் பங்கெடுத்த ஆசிரியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தி.மு.க தேர்தல் வாக்குறுதி  311 இல் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியிருந்தது. ஆனால், பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் டிசம்பர் 1 முதல் கருப்பு பட்டை அணிதல் ,மாவட்ட அளவில் பேரணி என தொடங்கிய போராட்டம் தற்பொழுது முற்றுகை போராட்டமாக மாறியுள்ளதாக அவ்வைமப்பினா் தெரிவித்துள்ளனா்..

பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான டிபிஐயில் இடைநிலை ஆசிரியர்கள்போராட்டம்-கைது .
 
Tags :

Share via