இந்தியா, சீனா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் போரை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் உக்ரைன் அரசு

by Admin / 06-03-2022 12:06:17pm
இந்தியா, சீனா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் போரை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் உக்ரைன் அரசு

உக்ரைனில் நேற்று 10 வது நாளாவது தாக்குதல் நடந்து வந்தது. அப்போது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு மனிதாபிமான அடிப்படையில், தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.

இதையடுத்து இன்று மீண்டும் 11 வது நாளாக போர் நடந்து வருகிறது. தொடர்ந்து ரஷ்யாவிடம் அனைத்து நாடுகளும் போரை நிறுத்துமாறு கேட்டு கொண்டாலும் அது பயனளிக்கவில்லை . இது குறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியது,
 
அப்பாவி மக்கள் மீதும், வெளிநாட்டு மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து உக்ரைனிக்கு படிக்க வருகின்றனர். 

அவர்கள் பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற உதவ வேண்டும். அவர்களுக்காக ரயில்களை ஏற்பாடு செய்துள்ளோம். உதவி எண்களையும் ஏற்படுத்தி உள்ளோம். அவர்கள் பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம். 

வெளிநாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற இந்தியா, சீனா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் போரை நிறுத்துமாறும், அப்பாவி மக்களை தாக்குவதை  நிறுத்துமாறும் கேட்டு கொள்ள வேண்டும் என்றார்.

 

Tags :

Share via