தை அம்மாவாசை விரதம் இருந்து அன்னதானம் வழங்கி, ஐதீக படி தம் முன்னோர்களுக்கு ........

by Admin / 08-02-2024 08:40:43am
தை அம்மாவாசை விரதம் இருந்து அன்னதானம் வழங்கி, ஐதீக படி தம் முன்னோர்களுக்கு ........

மாதம் தோறும் அம்மாவாசை வந்தாலும் வருடத்தில் இரண்டு அமாவாசைகளை முக்கியமாக சொல்வார்கள் .ஒன்று, ஆடி அமாவாசை இன்னொன்று தை அம்மாவாசை.. இந்த காலகட்டத்தில் இறந்து போன தம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிக முக்கியமானதாக கொள்ளப்படுகிறது. சாதாரண அமாவாசையில் தம் முன்னோர்களுக்கு கொடுக்கும் திதியை விட இந்த திதியில்  தர்ப்பணம் செய்கிற செயலுக்கான பலன்களை முன்னோர் வழங்குவர் என்கிற ஒரு நம்பிக்கை உள்ளது. 

தை அம்மாவாசை பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலை 8 மணி 2 நிமிடங்களில் ஆரம்பித்து மறுநாள் பத்தாம் தேதி அதிகாலை 4:.28 வரை தொடர்கிறது.. ராமேஸ்வரம் கன்னியாகுமரி போன்ற கடற்கரைகளில் இந்த அம்மாவாசை நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கொள்ளப்படுகிறது

.கடற்கரை ,அல்லது ஆறு ,குளம், அருவிகள் இருக்கக்கூடிய நீர்நிலைகளில் தம் முன்னோர்களுக்கு அம்மாவாசையில் பூஜைகளை செய்வார்கள், 

தை அம்மாவாசை விரதம் இருந்து அன்னதானம் வழங்கி, ஐதீக படி தம் முன்னோர்களுக்கு விரதமிருந்து இந்நிகழ்வை செய்தால் பித்ரு தோஷம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறையும் என்பது நம்பிக்கை.

தை அம்மாவாசை விரதம் இருந்து அன்னதானம் வழங்கி, ஐதீக படி தம் முன்னோர்களுக்கு ........
 

Tags :

Share via