சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

by Staff / 27-05-2024 12:22:13pm
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று (மே 27) மர்ம நபர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர். நாடு முழுவதும் சமீபகாலமாக பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.

 

Tags :

Share via