அமர்பிரசாத் ரெட்டிக்கு முன்ஜாமீன்

பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 10 நாள் கையெழுத்து போடாவிட்டால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது. பணம் கொடுக்கல் வாங்கலில் பா.ஜ.க பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுநர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :