இறைச்சிக்கு தடை

by Staff / 28-01-2023 03:23:48pm
இறைச்சிக்கு தடை

பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ கண்காட்சி நடைபெறவுள்ளது. இதையடுத்து யலஹங்கா விமான நிலையத்தில் இருந்து 10.கி.மீ சுற்றளவிற்கு, வரும் 30ம் தேதி முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை உண்ண, கழுகு போன்ற பறவைகள் வானில் பறக்கும்போது அவை விமானங்களில் மோதி பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்பதால் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories