சாதனைக்கு எதுவும் தடையில்லை ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் 3 அடி மனிதர்

இந்தியாவிலேயே ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் என்ற பெருமையை, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கட்டிப்பள்ளி ஷிவ்பால் பெற்றுள்ளார். 42 வயதுடைய இவர், 3 அடி உயரம் கொண்டவர். கடந்த 2004-ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்தார் கட்டிப்பள்ளி ஷிவ்பால், தமது மாவட்டத்திலேயே பட்டப்படிப்பை முடித்த முதல் மாற்றுத்திறனாளி.
இந்நிலையில் அவர் தனது விடாமுயற்சியின் காரணமாக வாகன ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றுள்ளார்
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தனது உயரத்தை காரணம் காட்டி மக்கள் தம்மை கிண்டல் செய்ததாகவும், தற்போது லிம்கா உள்ளிட்ட பல சாதனை புத்தகங்களில் தமது பெயர் இடம்பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஓட்டுநர் பயிற்சிக்காக உயரம் குறைந்தவர்கள் பலர் தம்மை தொடர்பு கொண்டதாகவும், அவர்களுக்காக அடுத்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :