கடைசி   விவசாயி   படத்திலிருந்து   இளையராஜா நீக்கம்

by Admin / 05-12-2021 11:53:05pm
கடைசி   விவசாயி   படத்திலிருந்து   இளையராஜா நீக்கம்

கடைசி   விவசாயி   படத்திலிருந்து   இளையராஜா நீக்கம்

தேசீய விருது பெற்ற படமான  காக்கா முட்டை படத்தை இயக்கியவர்  மணிகண்டன். இவர்   குற்றமே தண்டணை, ஆண்டவன் கட்டளை   ஆகிய படங்களையும்  இயக்கியுள்ளார். இவர்  தற்பொழுது  கடைசி விவசாயி என்ற படத்தை  இயக்கி வருகிறார். இப்படத்தில்,  விஜய் சேதுபதி  கெளரவத்தோற்றத்தில் நடித்து  உள்ளார். இப்படத்தின் நாயகனாக  நல்லாண்டி  என்ற   முதியவர்  நடித்துள்ளார்.


கடைசி விவசாயி  படத்திற்கு  இளைய ராஜா இசையமைத்து  வந்த  நிலையில்,படக்குழுவினரோடு ஏற்பட்ட கருத்து   மோதலால் இளையராஜா இசையமைத்த  இசையை அகற்றி விட்டு ,சந்தோஷ் நாராயணனை வைத்து படத்தின்  இசையமைப்பு  பணியை முடித்து விட்டனர். இதனால்,இளையராஜா படக்குழுவினர்  மீது இசைக்கலைஞர் சங்கத்தில் புகார்  அளித்துள்ளார்.

 

Tags :

Share via