நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த  அவகாசம் வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

by Editor / 20-09-2021 04:28:55pm
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த  அவகாசம் வழங்க முடியாது: சுப்ரீம் கோர்ட்



தமிழகத்தில் தேர்தலை நடத்த என்ன பிரச்சினை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.


தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.


இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவிசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா...? என கேள்வி எழுப்பினர்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. தேர்தலை நடத்த என்ன பிரச்சினை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது. கால அவகாசம் தொடர்பாக 2 நாட்களில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.


தமிழகத்தில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன; ஆகவே 7 மாதகாலம் அவகாசம் கேட்கிறோம், தற்போது அவ்வளவு கூட தேவையில்லை, 3- அல்லது 4 மாத காலம் அவகாசம் வழங்கினால் கூட போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

 

Tags :

Share via