170 ஆபாச வீடியோக்கள்.. 17 மாணவிகள் - சிக்கிய நதியா
சென்னையில் பள்ளி மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் பெண் புரோக்கர் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கிண்டி ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசி கைதான ரவுடி கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தவர் தி.நகரைச் சேர்ந்த நிதியா (37). இவர், கருக்கா வினோத்துடன் சேர்ந்து பாலியல் தொழில், மது பாட்டில்கள், கஞ்சா வியாபாரம் செய்து ஒரு பெண் தாதாவாக வலம் வந்திருக்கிறார். இந்த நிலையில், நதியா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 17 பள்ளி மாணவிகளின் 170 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.இதனால் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் வளசரவாக்கத்தில் மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்வதாகவும், ஒருநாள் இரவுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை நதியா வசூலித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 18ஆம் தேதி நதியா, அவரது சகோதரி சுமதி, 2 கணவர், உல்லாசம் அனுபவிக்க வந்த 75 வயது தாத்தா உட்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல், மேலும் இதில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
Tags :