ஜி20 மாநாட்டில் முதல்வர் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை: விசிக

by Staff / 12-09-2023 12:40:23pm
ஜி20 மாநாட்டில் முதல்வர் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை: விசிக

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சனாதனத்துக்கு எதிராக பல்வேறு பரப்புரை மற்றும் போராட்டங்களை விசிக முன்னெடுத்து வருகிறது. விசிக பற்றவைத்த நெருப்பு, இன்றைக்கு இந்தியா முழுவதும் பரவி எரிந்து கொண்டிருக்கிறது. சனாதனம் என்பது கொடுமையான கருத்தியல் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள தொடங்கிவிட்டனர். அமைச்சர் பி. கே. சேகர்பாபு, இந்து மதத்தின் மீது அதீதபற்று கொண்டவர். கடவுள் நம்பிக்கை மிக்கவர். அவர் இந்துக்களுக்கு எதிரி என்பதைபோல தோற்றத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயல்கின்றனர். சாதாரண மக்களின் மத நம்பிக்கையை பற்றி யாரும் பேசவில்லை. சனாதனத்தை தங்களின் மூலதனமாக பயன்படுத்தி கொண்டு, அரசியல் ஆதாயம் தேடும் சங்பரிவார்களின் இந்துத்துவா செயல்திட்டத்தைதான் அனைவரும் விமர்சிக்கிறோம். முதல்வர்கள் மு. க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி ஆகியோர் ஜி20 மாநாட்டில் பங்கேற்றது கூட்டணியின் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது. குடியரசு தலைவரின் அழைப்பின்படி முதல்வர்களாக பங்கேற்றனர். இதில் அரசியல் உள்நோக்கம் கிடையாது.

 

Tags :

Share via