சிக்கன் சாப்பிட மறுத்த மனைவி.. புதுமாப்பிள்ளை தற்கொலை

by Editor / 14-07-2025 01:43:08pm
சிக்கன் சாப்பிட மறுத்த மனைவி.. புதுமாப்பிள்ளை தற்கொலை

தஞ்சையை சேர்ந்த மணிகண்டன் (29) - சுபலட்சுமி (25) ஒரு மாதத்திற்கு முன்னர் குடும்பத்தார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தனர். இருவரும் திருப்பூரில் சுபலட்சுமி சகோதரி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் கடையில் சிக்கன் வாங்கி வந்து மனைவியை சாப்பிட சொன்னார். தனது சகோதரி கோயிலுக்கு சென்றதால் சிக்கன் சாப்பிட சுபலட்சுமி மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
 

 

Tags :

Share via