பொது சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.

by Staff / 12-05-2022 02:38:23pm
பொது சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.

 152 பழமை வாய்ந்த காலனியா  இந்தியா காலத்து தேச விரோத சட்ட பிரிவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட்டு உள்ளது உச்ச நீதிமன்றம் .அதுவரை இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதையும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகமான தேசவிரோத சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது அதுவரை மாநில அரசுகளின் சட்டத்தை பயன்படுத்துவதை தடுக்க உத்தரவிட முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. மத்திய அரசுக்கு 24 மணி நேரம் கெடு முடிவடைந்த நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories