ஓடிசாவில் தயாராகிவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம்

by Staff / 12-05-2022 02:32:39pm
ஓடிசாவில் தயாராகிவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியம்

ஒடிசாவில் உள்ள ருக்கேளாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான அனைத்து நவீன வசதிகளும் கொண்ட பிரம்மாண்டமான விளையாட்டரங்கம் கட்டப்பட்டு வருகிறது. ஹாக்கி ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளையாட்டு அரங்கில் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும். இது இந்தியாவின் மிகப்பெரிய ஹாக்கி விளையாட்டு அரங்க இருக்கும் இதுதவிர புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஹாக்கி அரங்கம் 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 முதல் 29ம் தேதி வரை விழாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன.

 

Tags :

Share via

More stories