பள்ளி வளாகத்தில் வெடிகுண்டா..? டிபன் பாக்ஸ் வெடித்து 3 சிறுவர்கள் படுகாயம்...

by Admin / 26-10-2021 03:09:42pm
பள்ளி வளாகத்தில் வெடிகுண்டா..? டிபன் பாக்ஸ் வெடித்து 3 சிறுவர்கள் படுகாயம்...

 

சிவகங்கை மாவட்டம் கீழக்குளம் கிராமத்தில் பள்ளி வளாகத்தில் டிபன் பாக்ஸ் வெடித்த விபத்தில், மாணவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பழைய பாழடைந்த பள்ளி கட்டிடத்தில், கீழக்குளம் கிராமத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் விளையாடி உள்ளனர். அப்போது, அங்கு கிடந்த டிபன் பாக்ஸை எடுத்து திறக்க முயன்றுள்ளனர். முடியாத காரணத்தால் டிபன் பாக்ஸை வீசி எறிந்து உடைத்துள்ளனர்.

அப்போது அதி பயங்கர சத்ததுடன் டிபன் பாக்ஸ் வெடித்து சிதறியது.  இதில் படுகாயம் அடைந்த ராம்கிஷோர், நவீன்குமார், வைணவன் ஆகிய 3 சிறுவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த போலீசார், பள்ளி வளாகத்திற்குள் டிபன் பாக்ஸில் வெடிபொருள் வந்தது எப்படி? என, சம்பவ இடத்தில் கிடந்த தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo