4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடந்து முடிந்த நிலையில் ஜூன் நான்காம் தேதி இந்தியா முழுவதும் வாக்கு என்னும் பணி நடைபெற்றது வாக்கு என்னும் பணி இன்று காலை தொடங்கிய நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும் தபால் வாக்குகள் 4 சுற்றுகள் ஆகவும் என்ன பட்டது இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகளும் விஜய பிரபாகர் மூன்று லட்சத்து 80 ஆயிரத்து 877 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 271 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக் 77, 31 வாக்குகளும் பெற்றனர் வாக்கு என்னும் பணி நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் பொது பார்வையாளர் நீளம் நம் தேவ் ஏக்கா முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் வழங்கினார் சான்றிதழை மாணிக்கம் தாகூர் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன் சென்று பெற்றுக்கொண்டார்
Tags : விஜய பிரபாகர்