13 பேரை கொன்ற கொலைகார புலி

by Staff / 14-10-2022 12:37:05pm
13 பேரை கொன்ற கொலைகார புலி

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலியில் உள்ள வாட்ஷா வனப்பகுதியில் சுற்றித் திரிந்த `சிடி-1’ என்ற பெயர் கொண்ட புலி, மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம் வரையிலான காலத்தில் மட்டும் அந்த ஆட்கொல்லி புலி 13 மனிதர்களை அடித்து கொன்றுள்ளது.இதையடுத்து டபோடா புலிமீட்பு குழு, சந்திராப்பூர் அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு படையினர் இணைந்து நேற்று காலை வாட்ஷா வனப்பகுதியில் இந்த புலியை பிடித்தனர். பிடிபட்ட புலியை நாக்பூரில் உள்ள கோரேவாடா விலங்குகள் மீட்பு மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo