விஜய்யை வரவேற்ற காவலர் அதிரடியாக சஸ்பெண்ட்.

தவெக தலைவர் விஜய்யை நேரில் பார்ப்பதற்காக சென்ற காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வரும் கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் ஸ்டேஷனில் மாற்றுப்பணியில் இருந்தார். கடந்த தினம் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அவரை பார்ப்பதற்காக பணி நேரத்தில் அனுமதி கேட்டு சென்ற கதிரவன், சீருடை இல்லாமல் கட்சிக்கொடி அணிந்துகொண்டு விஜய்யை வரவேற்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், ஆணையர் லோகநாதன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags : விஜய்யை வரவேற்ற காவலர் அதிரடியாக சஸ்பெண்ட்.