சேலத்தில் ரூ.168 கோடி மதிப்பில் 30,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

by Editor / 11-12-2021 03:12:30pm
சேலத்தில் ரூ.168 கோடி மதிப்பில் 30,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 ரூ.168 கோடி மதிப்பில் 30,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சீலநாயக்கன்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றக்கொண்டார். ரூ. 300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தையும், ரூ. 100 கோடியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தையும் துவங்கி வைத்தார்.பின்னர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
திராவிட இயக்க வரலாற்றில் சேலம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திராவிட இயக்க வரலாற்றில் சேலம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சேலம் உருக்காலை, சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், மகளிர் கலைக்கல்லூரி என அனைத்தும் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ரூ.283 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார்.

ஒருநாளில் மாற்றம் - நேற்று உத்தரவு.. இன்று முதல்வர் விழாவில் கணீர் குரலில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து! நேற்று உத்தரவு வெளியான நிலையில், இன்று சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

 

Tags :

Share via