முன்னாள் முதலமைச்சர் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 11ஆம் தேதி நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்தபோது இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்தும் வீரபெருமாளிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
Tags : முன்னாள் முதலமைச்சர்முதன்மை பாதுகாப்பு அதிகாரிவீரபெருமாளுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்.